#Humanstory
ஆவடி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் இருக்கிறது அந்த நரிக்குறவர் குடியிருப்பு. புழுதி படிந்த உடலில் உடையில்லாமல் வறண்ட தலையுடன் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, பெற்றோரும் அழுக்கு அப்பிய உடையில் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறார்கள். உதிர்ந்து சிதைந்த வீட்டுக்குள் இருந்து பட்டுப்புடவையில் பளிச்சென்று சிரித்தவாறு வரவேற்கிறார், இதே சமூகத்தின் அத்திப்பூ அடையாள மான சுனிதா. இந்தச் சமூகத்தில் அரசுப் பணிக்குச் சென்ற இரண்டாவது நபர். நடை உடை பாவனை என எல்லா வகையிலும் சுனிதாவின் மீது நவீனத்தைப் பூசியிருக்கிறது கல்வி.
Reporter - Anand Raj