கடலூர் மாவட்டத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மேலும் இருவரை காவல்துறை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.
கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 24-ம் தேதி தொடங்கி மே 17-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நாள்களில் மருந்துகள், மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் அடைக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India