பள்ளிப் பருவத்திலிருந்தே பொது வாழ்வில் பெரும் பங்கு கொண்டு, புரட்சிப் புயலாக சீறியெழுந்து, எதிர்நீச்சல் போட்டு தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, அரசியலில் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி. பெரியாரின் சுயமரியாதை நிழலில் வளர்ந்து, பின்னர் அண்ணாதுரையின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, தம் தளபதியின் தோளோடு தோள் நின்று தி.மு.க.வை வளர்க்க அரும்பாடு பட்டவர். தமிழார்வம் கொண்டவர்.