யூ-டியூபில் `ரெளடி பேபி' பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. `இது ஒரு யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்கல்’ என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். `ரெளடி பேபி' மட்டுமல்ல, யுவன் இசையில் உருவான பல பாடல்கள், `ரிப்பீட் மோட் பிளே லிஸ்டில்’ சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.