வினோதினி... கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி. சக பிள்ளைகளைப்போலத் தானும் பள்ளிக்குக் கம்மல் அணிந்து செல்ல வேண்டும் என்பது வினோதினியின் நீண்ட நாள் கனவு. அவள் பள்ளிக்கு அனுப்பப்படுவதே பெருங்கொடுப்பினை என்றெண்ணுகிற வீட்டுச் சூழல். பிறகு, எங்கிருந்து கம்மல் குத்துவது? காதணி விழா நடத்துவது?