திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள கணிக்கிழுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (வயது 19). உறவினர்களும் யாரும் கைகொடுக்காத நிலையில் தம்பி தங்கையுடன் ஆனந்தி வறுமையில் வாடினார்.இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியைச் சந்திக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தி. ` நீங்கள் உதவவில்லையென்றால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என கண்ணீருடன் கதறினார்.