இந்தியாவிலேயே சென்னை நகரில்தான் வெள்ளநீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ளது. வட சென்னையில் கொசஸ்தலை, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் என ஆறுகளும், 16 பெரிய நீரோடைகளும் சென்னை நகரத்தில் உள்ளன. இத்தனை இருந்தும் 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் அவற்றை முறையாகப் பராமரிக்காததுதான்.