புரிபடாத பல ரகசியங்கள் ஆங்காங்கே புதைந்து கிடக்கின்றன. அப்படியான ஒன்றுதான், நாமக்கல் மாவட்டம் போதைமலை குள்ளர்கள் வசிப்பிடம். இந்த மலையில் அவர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதாக மலைவாழ் மக்கள் நம்பி வருகின்றனர். குள்ளர்களுடைய வசிப்பிடமாகக் கூறப்படும் வரிசையான வீடுகள் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமானுஷ்யத்தன்மையுடன் இருக்கிறது. குள்ளர்களை தேடியலையும் சாமியார்கள் ஒருபுறமும், குள்ளர்கள் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் தங்கப் புதையலைத் தேடி சிலர் மறுபுறமும் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். போதைமலையின் மர்ம முடிச்சை அவிழ்த்துப் பார்க்க நானும் போதைமலையை நோக்கிப் பயணப்பட்டேன்!