உலகத்தில் ஒளியைவிட வேகமாகப் போகும் ஒரு விஷயம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை! சூரியனே டயர்டானதுக்கு அப்புறம் எழுந்து, பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்லோபிரேக்காக முடித்து, லன்ச்சை டின்னராக்கும்போது சண்டே முடிந்தேபோயிருக்கும். அந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ட்ரிப் அடித்தால், கொஞ்சம் மெமரிஸாவது டைரியில் மிஞ்சும். சென்னையில் இருக்கும் பேச்சுலர்களுக்கு இந்த விதி நிச்சயம் பொருந்தும். இந்த ஒரு நாளை வேஸ்ட் பண்ணாமல், இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும்; மதியம் கெயில் மாதிரி அடி பின்னியெடுக்கும் வெயிலுக்கு ஜில்லெனக் குளியலும் போட வேண்டும்; மெமரிகார்டையும் ஃபில் பண்ண வேண்டும். அப்படிப்பட்ட இடத்தை சீரியஸாக நெட்டில் தேடியபோது, வகையாகச் சிக்கியது நாகலாபுரம்.
a heaven near chennai nagalapuram falls