உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், ஓயவில்லை 'பத்மாவத்' படத்திற்கான எதிர்ப்பு. டிக்கெட் கவுன்டர்களை அடித்து நொறுக்குவதும், படத்தைத் தடை செய்யக்கோரி கோஷமிடுவதும் இன்னும் நின்ற பாடில்லை. அப்படியென்ன சிக்கல் இங்கே? உண்மையில் எதிர்த்தவர்கள் கருத்தின் கீழ் படம் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய பின்பும் இத்தனை தடைகள் ஏன்? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், தணிக்கைக் குழு, தீபிகா படுகோனின் ஆடையிலிருந்து, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் வரை அனைத்தையும் U/A சான்றிதழுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது.
what does padmavathi say what is the history really padmaavat