"அஞ்சு வயசுலேயே, 'எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க'னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். காலையில் அஞ்சரை மணிக்கு மேலே தூங்கிட்டிருந்தா, அப்பாவின் பெல்டுதான் பேசும். 'படிக்கிறேன்'னு புத்தகத்தோடு கிச்சனுக்குப் போய் தூங்குவேன்.
kovai sarala speaks about her career