சாம்பியன்ஸ் டிராபியில், தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி கெத்து காட்டிது, இந்திய அணி. குறிப்பாக, அப்போது தொழிலதிபர் விஜய் மல்லையாவும் ஆட்டத்தைக் காண நேரில் சென்றிருந்தார். வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்தாமல், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு மீட்டு வர இந்தியா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்த விஜய் மல்லையாவை, நெட்டிசன்ஸ் 'வெச்சு செய்தனர்'.