மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாது. மிகக் குறைவான நிலப்பரப்பே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். எனவே, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. இதில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே உள்ள எண்ணெய்க் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை. இந்தத் திட்டத்தால், தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும்' எனக் கூறியுள்ளது.