கைகொடுத்த நெட்டிசன்கள்! Trend - ஆன `பாபா தாபா’ தம்பதி! #BabaKaDhaba

NewsSense 2020-11-06

Views 1

Reporter - வெ.கௌசல்யா

`நான் மட்டுமில்லை, என்னைப்போல ஊரடங்கால் வருமானத்தை இழந்த பலர் இருக்கிறார்கள்' என்ற வரிகளையும் முன்வைக்கிறார் காந்த பிரசாத்.

டெல்லியின் தென்பகுதியில் வயதான தம்பதியரால் நடத்தப்படும் ஒரு சிறிய உணவகம், கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. ஆனாலும் தொடர்ந்து அவர்கள் நடத்திய வாழ்வாதாரப் போராட்டம், இன்று பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வைத்திருக்கிறது.

நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, `இந்த வீடியோ என் இதயத்தை உண்மையாகவே உடைத்துவிட்டது. டெல்லிவாழ் மக்கள் தயவுசெய்து இந்த பாபாவின் உணவகத்தில் சென்று உணவருந்துங்கள்’ என்று கூறியிருந்தார். #viral #trendingvideos #BabaKaDhaba

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS