மனைவியின் நிர்வாணப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய கணவன்!#shocking

NewsSense 2020-11-06

Views 3

சென்னையில் காதல் மனைவியின் நிர்வாணப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியரை நீண்ட தேடுதலுக்குப் பிறகு போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் விசாரித்தபோது நிர்வாணப் படத்தை அவர் வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 8.8.2020-ம் தேதி பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `தன்னுடைய அக்காள் மகளிடம் வரதட்சணை கேட்டு அவள் கணவர் விஜயபாரதி கொடுமைப்படுத்துவதாகவும், அவளின் நிர்வாணப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டுகிறார்' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விஜயபாரதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்துவந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS