இன்று அதிகாலை சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை பிடித்த போலீஸார் அவரை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.
CREDITS - எஸ்.மகேஷ்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India