சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகர் மட்டுமல்ல... தலையாய நகர். ஒரே நேரத்தில் உருவானது அல்ல, சென்னை. சிறுகச்சிறுகச் சேர்ந்து தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இடமாக உருப்பெற்றுள்ளது. இன்று ஜீன்ஸும் லெக்கின்ஸும் அணிந்த உயிர்கள் வாழும் இந்தச் சென்னை கற்கால, உலோகக் கால மனிதனைப் பார்த்துள்ளது. பல்லவர், நாயக்கர், போர்ச்சுக்கீசியர், ஆர்மேனியர், முகமதியர், டேனிஷ்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனப் பல நாட்டவர்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள்; இதில் பலர் ஆண்டும் உள்ளார்கள். கற்கால மனிதர்கள் கூடுவாஞ்சேரி, சத்தியவேடு பகுதியில் இருந்துள்ளார்கள். உலோகக் காலத்து மனிதர்கள் வாழ்ந்த தடயம் பல்லாவரம், பரங்கிமலையில் உண்டு.
#CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India