வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட, பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்? கோவையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்.... உயிருக்குப் போராடிய தன் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.