குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிரடியில் இறங்கியிருப்பது அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, அமைச்சர் விஜயபாஸ்கர் என்று அ.தி.மு.க ஆட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கும் வகையில் வருமானவரித் துறை, சி.பி.ஐ அமைப்புகளின் கை நீண்டிருப்பது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்தத் தன்னாட்சிப் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன.
#Vijayabhaskar #Gutkha #TamilnaduNewsToday