டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. டெல்லி, சாந்த் நகரிலுள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ்,லலித் பாட்டியா.படிப்பறிவு கொண்ட இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரும் கை, கால் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளனர்.இறந்துபோனவர்களின் அறையிலிருந்து வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி 11 குழாய்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.இந்தக் குழாய்களின் வழியே 11 பேரின் ஆன்மாக்களும் மோட்சத்துக்குச் செல்வதற்கே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.
this is the reason behind the suicide explains psychiatrist