தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் VIJAY, இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் 61-வது படமான 'MERSAL' படத்தின் FIRST LOOK POSTERம் நேற்று வெளியானது. இதில், விஜய்யின் பெயரை 'THALAPATHY VIJAY' எனக் குறிப்பிட்டுள்ளனர். 'இளைய தளபதி விஜய்யிலிருந்து' 'தளபதி விஜய்க்கு' மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான குறியீடாகவே பார்க்கின்றனர்.