கிராமங்களில் தன் பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையையே நம்பியிருக்கும் பெண்ணின் உண்மை நிலை என்ன தெரியுமா? வயிறு கீழிறங்கி குழந்தை அடிவயிற்றில் உதைக்கும். கால்கள் சுரந்து எட்டு வைத்து நடக்கவே துவழும். வலிக்கு மனம் கலங்கும். மருத்துவர் சொன்ன நாளுக்கு முன்பாகவே, தலை திரும்பியிருக்குமா என மனம் பதைபதைக்கும்.