ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பான விவகாரம், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த 9 -ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு பரிந்துரைசெய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த ஏழு பேரையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான முடிவில் மத்திய அரசின் ஆலோசனையின்படியே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த நிலையில், "இந்த ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன... ஆளுநர் என்னமுடிவு எடுப்பார் போன்ற பல தகவல்களை இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளலாம் #RajivGandhiAssassinationCase