#RedSandal #Forest #PasumaiVikatan
வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன்.
வீடியோ : த.ஜெயகுமார்
எடிட்டிங் : கிருத்திக்
In this video, R.B.Ganesan from Krishnagiri District has explained in detail about Red Sandal Plantation. He talks about the pros and cons of Red Sandal plantation in Tamilnadu. For more details buy the Pasumai Vikatan - Issue Date 10-12-2019.