தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை மரணம் 75 நாட்கள் போராடி வென்றது.
அவரது மரணத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு தினமும் அஞ்சலி செலுத்த கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 16-ஆவது நாள் நினைவு தினைத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது அபிமானிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை, மெரீனா, பெரம்பூர், எக்மோர், கோயம்புத்தூர், திருச்சி, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 16-ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karthik Subbaraj #dhanush