தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மஞ்சளாறுஅணை. இந்த அணையானது விவசாயத்திற்க்கு மட்டுமின்றி அருகில் உள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமம் மற்றும் தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து வந்த நிலையில் மஞ்சளாறு அணை நீர்வரத்தின்றி கானப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் சரிந்தே கானப்பட்டது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மஞ்சலாறு அணைக்கு நீண்ட நாட்க்களுக்கு பின்பு நீர்வரத்து 13 கன அடியாக வரத்துவங்கியது. மேலும் தற்ப்போதய அணையின் நீர்மட்டம் 35.10 அடியாகவும், நீர் இருப்பு 126.93 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 13 கன அடியாகவும், நீர் திறப்பு இல்லை, மேலும் நீண்ட நாட்க்களுக்குப்பின்பு அணைக்கு வரும் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளணர்.
des : Farmers rejoice when water comes to Manjalachar Dam