கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் பாடலை பாடிய பாடகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் தமிழ் பாடல் பாடிய பாடகர்கள் மீது தாக்குதல் நடத்தி, வாத்தியங்கள் சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் உள்ள இசைக் கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக்கலைஞர்கள் கர்நாடகாவில் உள்ள தமிழ் இசைக் கலைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பினர்.