வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு பேர்ணாம்பட்டை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நாள் ஒன்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் மருத்துவமனை தூய்மையற்று காணப்படுகிறது மேலும் நோயாளிகளுக்கு இந்த அரசு மருத்துவமனையில் பணம் பெற்று கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது பல மாதங்களாக இருதய நோய் குறித்து கண்டறியும் ஈசி ஜி மிஷினும் சரியாக இயங்கவில்லை இதுகுறித்து பலமுறை மருத்துவத்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் ஏழை மக்கள் கூலித்தொழிலாளர்கள் வெளியில் சென்று பணம் கொடுத்து தனியார் நிறுவனங்களில் ஈசி ஜி பரிசோதனை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளனர் மேலும் அவசர சிகிச்சைபிரிவிலும் முறையாக மருத்துவர்கள் பணிக்கு வருவதும் கிடையாது இதனால் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் மருத்துவத்துறையின் உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
des : The government is receiving treatment at the hospital and is treated.