1 ரூபாய்க்கு பரோட்டா, 10 ரூபாய்க்கு பிரியாணி..அசத்திய ஓட்டல்..குவிந்த கூட்டம்- வீடியோ

Oneindia Tamil 2019-08-06

Views 3

தேனி மாவட்டம் பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே முரளி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் அசைவ உணவகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, இன்று ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள், குவிய ஆரம்பித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவவே, சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்ப்பட்ட காவல்துறையிணர் விரைந்து வந்து மக்களை ஒழுங்குபடுத்தினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தங்களது பகுதி வருமையில் வாடும் மக்கள் அதிகம் உள்ள பகுதி என்றும் இப்பகுதி மக்கள் பிரியானி 10ரூபாய்க்கும் பரோட்ட 1 ரூபாய்க்கும் கிடைப்பது அரிது என்பதால் கூட்டம் குவிந்துள்ளதாகவும் இன்று ஏழ்மையில் உள்ள மக்கள் பிரியானி, புரோட்டா வாங்குவதற்க்கு அயிரக்கணக்கில் மக்கள் வந்து அதிகளவில் கூடி உள்ளதாகவும் தாஙங்கள் மிக மகிழ்ச்சயுடன் வாங்கி செல்வதாகவும் தெரிவித்தணர். மேலும் மாலை வரை வழங்க உள்ளதால் காவல்துறையிணர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

DES : Barota for one rupee, as Biriyani offered for ten rupees; The safety of the police, so as not to disturb the crowded traffic

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS