புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்டேட் வங்கி ATM இயந்திரத்தின் அவலநிலை- வீடியோ

Oneindia Tamil 2019-08-03

Views 1

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே சந்தைபேட்டை சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ATM மிஷின் உள்ளது அந்த மிஷினிற்க்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அவலநிலை. ATM மிஷினில் பணம் எடுக்க வருவது வங்கி கணக்கு உள்ளவர்கள் மட்டுமில்லை மிருகங்களும் தான் என்ற நிலை உள்ளது. சந்தைபேட்டை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதன் எதிர்புறம் அதன் ATM மிஷினும் உள்ளது இந்த மிஷினுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாரை சேர்ந்த பாதுகாப்பாளர்கள் இருந்து வந்தனர். ஆனால் தற்பொழுது அந்த பாதுகாப்பாளர்களும் வருவதில்லை இதனால் முறையான பராமரிப்பும் இல்லை. இதன் காரணமாக ATM மிஷின் கதவு முடப்படமல் இருப்பதால் ஆட்டுகுட்டி உள்ளே படுத்து கொள்கிறது இதனால் பணம் எடுக்க வருகின்றவர்கள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகின்றனர். இதற்கு வங்கி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து சிரமத்தினை போக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : State of the art ATM machine at Aranthangi, Pudukkottai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS