கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 பிஞ்சுகள் இறந்து இன்றுடன் 15 வருஷங்கள் ஆகின்றன. இதையொட்டி பள்ளி முன்பு ஊரே திரண்டு வந்து இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. தீயில் தன் குழந்தையை பறிகொடுத்த பெண் ஒருவர், உன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒரு போட்டோ கூட உன்னை எடுக்காம விட்டுட்டேனே.." என்று கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்துவிட்டது.