கடவுள் துகள்களின் ஆராய்ச்சியில் முதல் இந்திய பெண்..!
God particle என்படும் கடவுள் துகள்களின் ஆராய்ச்சி ஸ்விஸ் நாட்டின் ஜெனிவா நகரில் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது.
உலகின் மாபெறும் விஞ்ஞானிகள் மட்டுமே பணியாற்றும் இந்த ஆராய்ச்சி கூடத்தில் முதன் முறையாக Manjit Kaur என்ற ஒரு இந்திய பெண் இணைந்துள்ளார். இந்த பூமி எப்படி உருவானது என்பதை கண்டுப்பிடிப்பதே CERN ஆராய்ச்சி கூடத்தின் அடிப்படை நோக்கம்.
இந்த மாபெரும் ஆராய்ச்சியில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் இயர்பியல் ஆசிரியர் ஆக பணியாற்றும் 65 வயதான Manjit Kaur தற்போது CERN-இல் தேர்ந்துள்ளார்.
இவருக்கு 1989ஆம் ஆண்டே CERN கூடத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது, ஆனால் நேரடியாக பணியாற்றாமல் CERN-India CMS collaboration குழுவில் உறுப்பினராக இருந்தார்.
தற்போது நேரடியாக கூடத்திலேயே பணியாற்ற துவங்கியுள்ளார் Manjit Kaur.