எப்படியாவது பிறர் மதிக்க வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும். விரும்பியதைக் கற்கும் ஆர்வம் இருக்கிறது. அதில் ஜெயிக்கும் திறமை இருக்கிறது. அது போதும். மூலையில் அமர்ந்து அழுவதைக் காட்டிலும் விரும்பியதில் வென்று விட்டு அடுத்தடுத்த பிறவிகளிலும் மீண்டுமொரு திருநங்கையாகவே பிறக்க விரும்பும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் என்ன? வாழ்வில் சோர்வு தன்னைத் துரத்தும் போதெல்லாம் இப்படித்தான் யோசித்ததாகச் சொல்கிறார் ஜீவா.
அந்த உணர்வு தந்த வெற்றியின் அடையாளம் தான் இன்றைய ஜீவா!
சொந்த வீட்டிலிருந்து வெளியேறியது முதல் இன்றைய சென்னை வாழ்க்கை வரையிலாக தன் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை தினமணி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.