des
புதுச்சேரி மாணவர்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை கல்வித்துறை நிறைவேற்றக்கோரி இன்று அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனி கல்வி வாரியம் உருவாக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி 50க்கும் மேற்பட்ட அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் கல்வித்துறை நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் நலன் தொடர்பான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி கல்வித்துறை நுழைவாயில் மீது ஏறி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்
Cancel accreditation of high-paying private school, fill vacant teaching posts in government school
#Puducherry
#Accreditation