மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து உள்ளாட்சி மற்றும் குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளுடன் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துபேசியபோது , தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை கடுமையாக குறைந்துள்ளது மழை நீர் சேமிப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும், எதிர்கால நலன் கருதி நீர் சேமிப்பினை பின்பற்ற வேண்டும் என்றார் . மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு அலுவலங்களிலும், வீடுகளிலும் அலட்சியமின்றி செயல்படுத்த வேண்டும் என்றார், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதிய திட்டங்கள் எதுவும் தற்போது வரை செயல்படுத்தவில்லை எனவும், முதன் முறையாக குடிநீர் வடிகால் வாரியத்தின் வழியாக லாரிகளின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது , தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு மேற்கோள்ளப்பட்டது என்று கூறினார்.
DES : Interview with Drinking Water Drainage Board Managing Director Maheshwaran Madurai