தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகேயுள்ள பொய்யுண்டார்குடிக்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் பேசுகையில் நமது சமூகம் ஏற்றத்தாழ்வு மிக்கதாக உள்ளது அதனால் தேச வளர்ச்சி பின்னடைகிறது. ஏற்றத்தாழ்வுகளை கலைய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் புதிய குடும்ப அட்டைகள் 10 நபர்களுக்கும் பட்டா மாறுதல் 10 நபர்களுக்கும் இயற்கை மரண நிதி 16 நபர்களுக்கும் திருமண உதவித்தொகை 6 நபர்களுக்கும் இலவசபட்டா 11 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
des : Officials should not ignore public petitions. District Revenue Officer Advice.