பென்னாகரம் அருகே ஏரியூர் சுற்றுவட்டார கிராமங்களில் தொடரும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டும் சுகாதாரத் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கலான மலையனூர், இராம கொண்ட அள்ளி, புது நாகமரை, கவுண்டனூர், சந்தன கொடிக்கால், அழகா கவுண்டனூர், நல்லூர் காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறையிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு மருத்துவ முகாம் நடத்தவில்லை என குற்றச்சாட்டிய அக்கிராம மக்கள் இன்று ராமகொண்ட அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மர்ம காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க உடனடியாக ஏரியூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மர்ம காய்ச்சல் கட்டுப்படுத்தி நோய் தாக்கியவர்களை காக்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர். ஏரியூர் துணை சுகாதார நிலையம் தலைமை மருத்துவர் மற்றும் ஏரியூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் முகாம்த்தி செவிலியர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் ஏரியூர் மேச்சேரி போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
des : Public road rage condemns health department for negligence in treating the persistent mystery fever in the surrounding villages