புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்- வீடியோ

Oneindia Tamil 2019-06-08

Views 1.3K

புதுச்சேரி பல்வேறு பகுதிகளில் திருட்டுப் போன இருசக்கர வாகனங்களை புதுச்சேரி போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர் இந்நிலையில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் மாறன் . புதுச்சேரி கடற்கரை சாலையில் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது இந்த நிலையில் இன்று வாகன சோதனை சோனா பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது அப்போது தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் நிதிஷ்குமார் ஆகிய இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சோதனையிட்டபோது ஆவணங்கள் இன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்று ஒப்புக்கொண்டனர் என்றும் இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்களுக்கு திருட்டுக்கு உடந்தையாக இருந்த கூட்டணியான அரவிந்த் என்பவன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவனைத் தேடி வருவதாக அவர் தெரிவித்தார் கல்லூரி மாணவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிளில் மதிப்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும் அதனை பறிமுதல் செய்ததாக எஸ் பி மாறன் தெரிவித்தார்.

des : Police arrested two college students who stole motorcycle in Puducherry and seized 3 motorbikes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS