திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்