ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் பகுதியில் கண்மாய் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மணல் அள்ளும் ஓரிடம் சென்று உங்களுக்கான உரிமத்தை புதுப்பித்து விட்டீர்களா என்பது தொடர்பாக கேட்டதாகவும் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏற்பட்ட தகராறில் மணல் அள்ளும் தரப்பினர் தாக்கியதில் இளமனூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கொல்லப்பட்டார் மேலும் மூன்று பேரை தாக்கியதில் தலையில் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பாக திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு தலைமை மருத்துவமனையில் முகப்பு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து 20 நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.தொடர்ந்து டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
des : One person was killed in Ramanathapuram sand when 3 people were injured in the government hospital.