பென்னாகரம் ஏரியூர் அருகே வனப்பகுதி ஒட்டிய பகுதியில் ஆடு மேய்த்தவரை யானை மிதித்து பலி-வீடியோ

Oneindia Tamil 2019-05-29

Views 709


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கந்தகவுண்டர் மகன் 50 வயதான மாணிக்கம் மனைவி செல்வி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் ஏழ்மை நிலையில் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தார். மாணிக்கம் இன்று வழக்கம் போல் ஆடுமேய்க்க சிகரலஅள்ளி அருகே உள்ள வனப் பகுதி ஒட்டிய பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். வனப்பகுதியில் குட்டியுடன் பெண் யானை நடமாட்டம் இருந்து வந்தது. இன்று மதியம் குட்டியுடன் இருந்த தாய் யானை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தை துரத்தி உள்ளது. யானை துரத்தியதில் மாணிக்கம் ஓடியுள்ளார் அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். ஆவேசத்தில் இருந்த யானை மாணிக்கத்தை மிதித்துக் கொன்று உள்ளது. மாணிக்கத் தோடு ஆடு மேய்க்க சென்றிருந்தவர்கள் இச் சம்பவத்தை பார்த்து அலறியடித்து ஓடி உள்ளனர். அவர்கள் உடனடியாக ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஊர் பொதுமக்கள் இணைந்து மாணிக்கத்தை தேடி உள்ளனர். அப்போது மாணிக்கம் சடலமாக கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவரின் சடலத்தை அப்பகுதியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணிக்கம் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அவரது வருவாயை நம்பி அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் யானை தாக்கி உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்தின் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாக்கி உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமாறு ஏரியூர் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

des : Elephant kills elephant in the forest near Pennarakaram Lake

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS