நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மாவட்டத்தில் தோவாளைக்கு அடுத்தபடியாக சங்கரன்கோவிலில் தான் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் பகுதிகளில் மல்லி, பிச்சு, கனகாம்பரம், கேந்தி, ரோஜா, சம்மங்கி, வாடாமல்லி, உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்துள்ள மலர்கள் அனைத்தும் சங்கரநாராயணசுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சங்கரன்கோவில் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மல்லிகை செடிகள் பூத்து குலுங்குவதால் தினசரி பூ மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட பல மடங்கு மல்லிகை பூ வரத்துள்ளது. இன்று சுப முகூர்த்த நாளாக இருந்த நிலையில் மல்லிகைப் பூவிற்கு அதிக விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் கிலோவிற்கு மேல் மல்லிகைப்பூ வரத்து இருந்ததால் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 150க்கு விற்பனை ஆனது. மல்லிகை செடியில் இருந்து கூலித் தொழிலாளிகள் சம்பளம் கொடுத்து பூ பறித்து வரும் விவசாயிகளுக்கு மல்லிகைப்பூ விலை வெகுவாக குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு கூட பூ விலை போகாததா மல்லிகைப் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
DES : The farmers are suffering from the sale & price of Rs.150