தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புது ரெட்டியூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் 60 வயது அண்ணாமலை ஆவர் இவர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது கடத்தூர் புது ரெட்டியூர் கிராமத்தைச் சார்ந்தவர் அண்ணாமலை இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார் இவர் தனது தந்தையின் குடியிருப்பு வீட்டை அபகரிக்க முயற்சிப்பதுடன் அடியாட்கள் கொண்டு தனது மகன் சதீஷ்குமார் என்னையும் என் மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார் இதுகுறித்து கேட்டால் நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருங்கள் வீடு எனக்கு சொந்தமானது மேலும் குடியிருக்கும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் உன்னையும் உன் மனைவியையும் கொன்று விடுவேன் என இவ்வாறு தனது தந்தையான அண்ணாமலையிடம் இவ்வாறு கூறினார் இதனால் அச்சம் அடைந்த நான் கடத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று எனது பெயரில் உள்ள வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் என் மகன் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என் மகனுடன் கை கோர்த்துக் கொண்ட கடத்தூர் காவல் நிலைய போலீசாரை கண்டித்தும் என் மனைவியையும் என்னையும் வெளியேற்றி வீட்டை அபகரிக்க நினைக்கும் என் மகன் சதீஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போன கடத்தூர் காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எனது வீட்டை மீட்டு கொடுப்பதுடன் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பத்திரத்தை மீட்டுத்தரக் கோரியும் எஸ்பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் தந்தையை வீட்டு சொத்திற்காக மகனே கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தந்தை புகார் மனு அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
des : The petition filed by the father of the victim threatened by the son.