ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில் கடந்த 2000- ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பல்வேறு ஊர்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் கடந்த கால அனுபவங்கள், நிகழ்காலத்தில் தங்களின் நிலைமை குறித்து மனம் விட்டு பரிமாறிக்கொண்டனர். இதற்கான விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். முத்தனம்பட்டி, கரிசல்பட்டி, பிராதுக்காரன்பட்டி, அய்யனார்புரம், எஸ்.எஸ்.புரம் கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள் பள்ளியில் நடந்த தங்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் குறித்து தெரிவித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
des : SSB Government Higher Secondary School near Adipatti,