தருமபுரி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு. தருமபுரி அடுத்த குப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்டது. குரும்பட்டி மற்றும் கொட்டாய் மேடு கிராமம். இந்த இரு கிராமங்களிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த இரு கிராமத்திற்கும் போதிய குடிநீர் இல்லாமல் கடும் அவதிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் தருமபுரி மாவட்டத்தில் நிலம் வறட்சியின் காரணமாக மேலும் இப்பகுதிக்கு கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் இக்கிராம மக்கள் குடீநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். தங்கள் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுவதால் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் பழுதான போர்வெல் சரி செய்ய வேண்டும் என கடந்த ஒரு மாதமாக பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை போக்காததால் வேறு வழியின்றி இன்று காலை இரு கிராம மக்களும், செட்டிகரை அரசு பொறியல் கல்லூரி முன்பு உள்ள தருமபுரி-அரூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இரண்டு நாட்களில் தங்கள் பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்குவதாகவும்,பழுதான போர்வெல்லை சரி செய்வதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், தருமபுரி-அரூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hogenakkal collective drinking water near Dharmapuram