முசிறி அருகே தொட்டியத்தில் சூறாவளி காற்றுக்கு சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் உடைந்து சேதம்- வீடியோ

Oneindia Tamil 2019-05-10

Views 331

திருச்சி மாவட்டம் ,முசிறி அருகே உள்ள சீலை பிள்ளையார் புத்தூரில் பலத்த சூறாவளிக் காற்றினால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்களும் சுமார் 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சில வீடுகளும் சேதம் அடைந்தது. சூறாவளி காற்றில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தொட்டியம் தாலுக்கா சீலை பிள்ளையார் புதூர், நத்தம் காட்டுப்புத்தூர் ,ஐனா பட்டி, ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீர் சூறாவளி காற்று வீசியது. இதில் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் உடைந்து சேதமானது. சுமார் 25-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உடைந்து போனது. சிலரின் ஓடு மற்றும் கூரை வீடுகள் சேதமடைந்தது. சூறாவளி காற்றினால் வாழைமரங்கள் உடைந்த தகவலறிந்த முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கோட்டாட்சியர் சேதத்தின் மதிப்பீட்டை உடனடியாக கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொட்டியம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் உடைந்து விழுந்து சேதமானதால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மின்கம்பங்கள் உடைந்துள்ளதால் கிராமப் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. இதையடுத்து மின் வாரிய அலுவலர்கள் மின் கம்பங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் நட்டு மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திடீர் சூறாவளி காற்றில் பாதிக்கப்பட்டுள்ள காட்டு புத்தூர் விவசாயிகள் தமிழக அரசு தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : About 1 lakh banana trees have been damaged by hurricane winds near Musiri

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS