ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய திருச்செந்தூர் தலைமையிடத்து துணை வட்டாச்சியர் கோமதிசங்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் திருச்செந்தூர் அருகே உள்ள கிருஷ்னாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிதி நிறுவனம் தொடங்குவதற்காக செல்வநிலை சான்றிதழ் (சால்வன்ஸ் சர்டிபிகேட்)கேட்டுமனு அளித்துள்ளார். சான்றிதழ் வழங்குவதற்காக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோமதி சங்கர் பாலமுருகனிடம் ரூ20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பாலமுருகன் லஞ்ச ஒழிப்பில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுப்பையா பாலமுருகனிடம் ரசாயனம் தடவிய ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பாலமுருகன் துணை தாசில்தார் கோமதி சங்கரிடம் பணத்தை வழங்கினார் . அங்கு ஒளிந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கோமதி சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கோமதி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
des : Rs 20,000 bribe Vasanthurai headed by Deputy Chief Minister Gomati Sankarai arrested by police