தஞ்சாவூர் அருகேயுள்ள வேங்கராயன்குடிகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடராஜன் இவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார் இவரது குடும்பத்தில் கடந்த 4 வருடங்களாக ஆண் நாய் ஒன்றை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர் அந்த நாய்க்கு பப்பி என பெயரிட்டிருந்தனர். விவசாயி நடராஜன் நாள்தோறும் காலையில் பப்பியை அழைத்துக் கொண்டு தன்னுடைய தோட்டத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல பப்பியை கூட்டிக் கொண்டு தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று திடீரென்று தோட்டத்தில் இருந்து ஊர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் நகராமல் அங்கேயே நின்றார். ஆனாலும் நடராஜனை நோக்கி அந்த பாம்பு சீறிக் கொண்டு வந்தது.
#Snake
#Poison