தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் v.ராஜாராமன் தலைமையில் கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையப் பாதுகாப்பு, சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Advisory meeting with candidates and their agents in front of District Superintendent of Police, Dr. Rajasekharan