கோவையில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கத்துக்கு மாறான வகையில் வரலாறு காணாத அளவுக்கு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.; இதனால் அதிகபட்சமாக 100 முதல் 103 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. அதிக வெப்பம் காரணமாக அனல்காற்று வீசியதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வரும் மழையால் நகரில் குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Des: Heavy Rain in Kovai.